விருத்தாசலத்தில் தேசிய விளையாட்டு தினம்
கடலுார்: கிரீடா பாரதி மற்றும் ரைட் ஷாட் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில், விருத்தாசலத்தில் தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது. விழாவில் விளையாட்டு வீரர்களின் ஒழுக்கம், ஆரோக்கியம், உடல் வலிமை, தைரியம் போன்றவற்றை விளையாட்டின் மூலம் எப்படி கொண்டு வருவது, போதை பழக்கங்களுக்கு எதிராகவும், செல்போனுக்கு அடிமையாகாமல் குழந்தைகளை பாதுகாப்பது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது. கிரீடா பாரதி மற்றும் ரைட் ஷாட் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் நடந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பெற்றோர்கள வரவழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர். மாணவர்கள், விளையாட்டில் சாதித்து தேசத்திற்கு பெருமை சேர்ப்போம் என உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். சுதர்ஷன் என்டர்பிரைசஸ் நிறுவனர் விஜய் பங்கேற்று, மாணவர்களின் வெற்றிக்கு துணை நிற்போம் என உறுதி கூறினார். கிரீடா பாரதி சங்க மாவட்ட தலைவர் செந்தில்வேலவன், செயலாளர் அசோகன், விருத்தாலம் கல்வி மாவட்ட செயலாளர் ராஜராஜசோழன், இணைசெயலாளர் மாஸ்டர் கமலேஸ்வரன் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.