உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நாட்டு நலப்பணித்திட்ட தினம்

நாட்டு நலப்பணித்திட்ட தினம்

கடலுார் : கடலுார் கிருஷ்ணசாமி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் நாட்டு நலப்பணித்திட்ட தினம் கொண்டாடப்பட்டது.கல்லுாரி தாளாளர் டாக்டர் ராஜேந்திரன் மற்றும் செயலர் விஜயகுமார் ஆகியோர் தலைமை தாங்கி, மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்தனர். இதில், பல வகையான மரக்கன்றுகள் நடப்பட்டது. மேலும், மரம் நடுவது குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை தாளாளர் ராஜேந்திரன் வாசிக்க மாணவர்கள் ஏற்றனர்.அப்போது, கல்லுாரி முதல்வர் இளங்கோ, துணை முதல்வர் ரகு, நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் மற்றும் பேராசிரியர்கள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் குணசீலன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை