உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வலது காலுக்கு பதிலாக இடது காலில் ஆபரேஷன்; விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அலட்சியம்

வலது காலுக்கு பதிலாக இடது காலில் ஆபரேஷன்; விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அலட்சியம்

விழுப்புரம்: விழுப்புரம் அரசு மருத்துவமனையில், தனியார் பஸ் கண்டக்டருக்கு வலது காலுக்கு பதிலாக இடது காலில் அறுவை சிகிச்சை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.விழுப்புரம் அடுத்த விநாயகபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து, 46; தனியார் பஸ் கண்டக்டர். இவர் கடந்த சில மாதங்களாக வலது காலில் அதிக வீக்கம் ஏற்பட்டு முட்டி வலியால் அவதியடைந்து வந்தார்.கடந்த 30ம் தேதி கால்வலி அதிகமானதால், விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு எம்.ஆர்.ஐ., ஸ்கேன் பரிசோதனை செய்தபோது, அவரது வலது காலில் 2 இடங்களில் ஜவ்வு கிழிந்து இருந்தது தெரியவந்தது. இதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் கூறினர். இதையடுத்து அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று காலை 8:00 மணிக்கு மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து அவர், பகல் 12:45 மணிக்கு வார்டுக்கு மாற்றப்பட்டார். மாரிமுத்து மயக்கம் தெளிந்து பார்த்தபோது, வலது காலில் அறுவை சிகிச்சை செய்வதற்கு பதிலாக இடது காலில் அறுவை சிகிச்சை செய்து கட்டு போடப்பட்டிருந்தது.இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இடது காலில் மாற்றி அறுவை சிகிச்சை செய்தது குறித்து கேட்டதற்கு டாக்டர்கள், விழிப்பிதுங்கி நின்றனர். அங்கிருந்த டாக்டர்களிடம், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு வருத்தம் தெரிவித்த டாக்டர்கள், தவறாக நடந்துவிட்டதாகவும், 18 நாளில் குணமாகிவிடும் எனவும், வரும் 7ம் தேதி வலது காலில் அறுவை சிகிச்சை செய்வதாக கூறினர். தகவலறிந்த விழுப்புரம் மேற்கு போலீசார் மாரிமுத்து உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, டாக்டர்களிடம் விசாரித்தனர். இதனால், மருத்துவமனையில் பதற்றமான சூழல் நிலவியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அரசு டாக்டரின் இந்த அலட்சியப்போக்கு விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

essemm
ஜூலை 06, 2025 22:04

ஏனுங்க முதல்வரே. நீங்க உங்கப்பா மொழிப்போர் நடத்தினப்போ. எங்கே இருந்திங்க. ஐயோ என்ன அழகானடகம் ஆடாறீங்க. அப்பா. உங்களுக்கு இருக்கிற மொழிப்பாற்று. உலகத்துல வேறு யாருக்குமே கிடையாது. உங்களை கொண்டுபோய் ரஷ்யா உக்ரயின் ல விடணும். அவங்க போரை நிப்பாட்டியு போயிருவாங்க.


NBR
ஜூலை 06, 2025 20:02

WE CAN UNDERSTAND WHY OUR POLITICAL LEADERS NOT GETTING TREATMENT IN INDIA.


krishnamurthy
ஜூலை 06, 2025 15:04

இந்த மருத்துவர்கள் மீது வழக்கு போடவேண்டும், கைது செய்யவேண்டும், இனி தொழில் செய்ய தடை விதிக்க வேண்டும்,


Parthasarathy Badrinarayanan
ஜூலை 06, 2025 13:52

டாஸ்மார்க்கிலிருந்து ஆபரேஷன் தியேட்டர் போனால் ?


ராஜ்
ஜூலை 06, 2025 13:39

நீட் எவ்வளவு முக்கியம் என்று இப்போ தெரிகிறது


Pmnr Pmnr
ஜூலை 06, 2025 13:07

அந்த மருத்துவர் விரக்த்தியில் இருந்து இருப்பார் அதான் இந்த தவறு நடந்து உள்ளது


vijay
ஜூலை 06, 2025 13:07

இது என்ன பிரமாதம் ஆளையே மாற்றி அருவி சிகிச்சை செய்த வரலாறு எல்லாம் நமக்கு உண்டு அண்ணே


கர்ணன் கர்மபுரம்
ஜூலை 06, 2025 12:52

இதுதான் மாறுகால் மாறுகை வாங்குவது என்பதோ


Ramesh Sargam
ஜூலை 06, 2025 12:18

போலி டாக்டர்கள் ... மக்களே உஷார். சிபாரிசின் பேரில், அதிக பணம் கொடுத்து மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து தேர்ச்சிபெறும் மருத்துவர்கள்தான் இப்படி செய்யவாய்ப்புண்டு. ஆபரேஷன் செய்த டாக்டர்கள் அனைவரும் பணிநீக்கம் செய்யப்படவேண்டும். இடது காலில் பிரச்சினை இல்லாமலே எப்படி, என்ன ஆபரேஷன் செய்தார்கள்? புரியவில்லையே.. இப்பொழுது இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், நாளை அங்கு அட்மிட் ஆகியுள்ள ஒரு ஆணுக்கு இவர்கள் பிரசவம் பார்த்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை... மக்களே உஷார்...


Rathna
ஜூலை 06, 2025 11:55

அரசாங்க வேலை என்பதால் வரும் அலட்சியம், மற்றும் எவனும் நம்மை கேள்வி கேட்க முடியாது என்பது ஏழைகளின் உயிரை மிக மோசமாக நடத்துகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை