மேலும் செய்திகள்
போராட்டம் எதிரொலி தரமான அரிசி வழங்கல்
20-Sep-2025
நெல்லிக்குப்பம், : அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், ரேஷன் கடை முற்றுகை போராட்டத்தை மா.கம்யூ., கட்சியினர் வாபஸ் பெற்றனர். நெல்லிக்குப்பம் அடுத்த திருக்கண்டேஸ்வரம் ரேஷன் கடையில் தரமில்லாத அரிசி வழங்குவதை கண்டித்து நாளை 6ம் தேதி ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக மா.கம்யூ., கட்சி அறிவித்தது. இது தொடர்பாக திருக்கண்டேஸ்வர் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் சார் பதிவாளர் அமர்நாத் முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. மா.கம்யூ., மாவட்ட குழு ஜெயபாண்டியன், பகுதி செயலாளர் ஸ்டீபன் ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். தரமான அரிசி வழங்குவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக மா.கம்யூ., நிர்வாகிகள் கூறினர்.
20-Sep-2025