உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெல்லிக்குப்பம் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க கூட்டம்

நெல்லிக்குப்பம் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க கூட்டம்

நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க கூட்டம் நடந்தது.நெல்லிக்குப்பம் கிளை நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க கூட்டம் தலைவர் ஜெயராமன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் ஆதிநாராயணன் முன்னிலை வகித்தார்.செயலாளர் தேவனாதன் வரவேற்றார். தமிழக அரசு மூலம் கிடைக்க வேண்டிய சலுகைகள் மற்றும் உரிமை தொகைகளை பெற்று தர உதவுவது, ஓய்வூதியர் குடும்பத்தினருக்கு மருத்துவ முகாம், தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பு நடத்துவது. நெல்லிக்குப்பம் ஆலை ரோடு சந்திப்பில் விபத்துகளை தவிர்க்க வேகத்தடை அமைக்க வேண்டும். நெல்லிக்குப்பத்தை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா அமைக்க வேண்டுமென்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.பொருளாளர் இளங்கோவன், நடராஜன், நாகராஜன், ஜெயராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ