புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வு
கடலுார்; கடலுார் மாவட்டத்தில் நடந்த புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வு மையங்களில், சி.இ.ஓ., ஆய்வு செய்தார்.கடலுார் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் மூலம் 15 வயது கடந்த எண்ணறிவு மற்றும் எழுத்தறிவு பெறாத நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு தன்னார்வலர்களைக் கொண்டு கற்றல் கற்பித்தல் பணி நடந்து வந்தது. கற்போர்களுக்கான அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு 14 ஒன்றியங்களில் 762 மையங்களில் 14,559 கற்போர்கள் தேர்வு எழுதினர்.கடலுார் உண்ணாமலைசெட்டிச்சாவடி, குமாரபுரம், வரக்கால்பட்டு மற்றும் குணமங்கலம் ஆகிய மையங்களில் நடந்த தேர்வை சி.இ.ஓ., எல்லப்பன் ஆய்வு செய்தார்.