கடலுாரில் புதிய பஸ் நிலையம் கருத்து கேட்பு நடத்த முடிவு
கடலுார்: கடலுாரில் புதிய பஸ் நிலையம் அமைப்பது தொடர்பாக பொதுமக்கள், கவுன்சிலர்களிடம் கருத்து கேட்கப்படும் என, மாநகராட்சி கமிஷனர் கூறினார்.மாநகராட்சி கூட்டத்தில் சரவணன் (பா.ம.க.) பேசும்போது, கடந்த கூட்டத்தில் அரிசி பெரியாங்குப்பத்தில் பஸ் நிலையம் அமைக்க உள்ளதாக கூறப்பட்டது. தற்போது பாதிரிக்குப்பத்தில் வரப்போவதாக தீர்மானம் வந்துள்ளது. எந்த இடத்தில் புதிய பஸ் நிலையம் வருகிறது என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.இதற்கு பதிலளித்து பேசிய கமிஷனர் அனு, 'பாதிரிக்குப்பத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.இடம் தேர்வு செய்யும் பணி மட்டுமே நடந்து வருகிறது. அரிசிபெரியாங்குப்பத்திற்கு மாற்று இடம்தான் பாதிரிக்குப்பம் உள்ளது. பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர்களிடம் கருத்துகேட்பு கூட்டம் நடத்திய பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.