உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சங்காலயா மோட்டார்சில் புதிய கார் அறிமுகம்

சங்காலயா மோட்டார்சில் புதிய கார் அறிமுகம்

கடலுார்: கடலுார் சங்காலயா மோட்டார்ஸ் நிறுவனத்தில் மகேந்திராவின் புதிய கார் அறிமுக விழா நடந்தது. துணை பொது மேலாளர் வசந்தகுமார் வரவேற்றார். ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளர் பரணிதரன், ஸ்ரீராம் பைனான்ஸ் முதன்மை மேலாளர் விமல்நாதன், சோழ மண்டலம் பைனான்ஸ் மேலாளர் முருகன் குத்து விளக்கேற்றினர். சங்காலயா மோட்டார்ஸ் பொதுமேலாளர் ராஜேந்திரன், புதிய கார் குறித்து விளக்கினார். விழாவில், எக்ஸ்.யூ.வி. 3 எக்ஸ்.ஓ., வின் ரிவெக்ஸ் கார் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரில் இரண்டு இஞ்ஜின் கொண்டது. மூன்று வகை மாடல்களில் ஐந்து கலர்களில் கிடைக்கிறது. பேனாரோமிக் சன் ரூப், லெதர் பிலாக் சீட்டு மற்றும் பிலாள் அலாய் வீல் உட்பட பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளது. இதன் ஆரம்ப விலை 8.94 லட்சம் ரூபாய் முதல் 12.94 லட்சம் வரை உள்ளது. சங்காலயா மோட்டார்ஸ் முதன்மை செயலாக்க அதிகாரி கார்த்திக், மேலாளர் நரேன் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சங்காலயா மோட்டார்ஸ் ஊழியர்கள் செய்திருந்தனர். சிலம்பரசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி