உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அம்மனுக்கு புதிய தேர்

அம்மனுக்கு புதிய தேர்

சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள சிவகாமிசுந்தரி அம்மன் கோவில் ஐப்பசி பூர உற்சவத்திற்காக புதிய தேர் செய்யப் பட்டுள்ளது. சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோவில் சிவகங்கை குளத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீசிவகாமி அம்மன் கோவிலில் ஐப்பசி பூர உற்சவம் கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாளை திருத்தேர் உற்சவம் நடைபெற உள்ளது. தொடர்ந்து அம்பாளுக்கு லட்சார்ச்சனை நடைபெறும். சிவகாமசுந்தரி அம்மன் ஐப்பசி உற்சவத்திற்காக புதிய தேர் செய்யப்பட்டுள்ளது. வரும், 14 ம் தேதி பட்டு வாங்கும் உற்சவமும், பூரச்சலங்கை உற்சவமும், உற்சவ அம்பாளுக்கும் மகாபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெறுகிறது. வரும் 15ம் தேதி இரவு ஸ்ரீ சிவானந்தநாயகி சமேத ஸ்ரீ சோமாஸ்கந்தர் திருக்கல்யான உற்சவம் நடைபெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர். இந்த ஆண்டு முதல், சிவகாமசுந்தரி அம்மன் புதிய தேரில் வலம் வர உள்ளார். இன்று புதிய தேருக்கு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, வெள்ளோட்டம் நடைபெற உள் ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ