உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பாலுார் அரசு பள்ளியில் புதிய வகுப்பறை திறப்பு

பாலுார் அரசு பள்ளியில் புதிய வகுப்பறை திறப்பு

நடுவீரப்பட்டு: பாலுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறை மற்றும் ஆய்வுக் கூட கட்டடம் திறப்பு விழா நடந்தது. பண்ருட்டி அடுத்த பாலுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் 3 கோடியே 73 லட்சம் ரூபாய் மதிப்பில் 9 வகுப்பறைகள், உயர்நிலை மாணவர்களுக்கு 2 ஆய்வகங்கள், மேல்நிலை மாணவர்களுக்கு 2 ஆய்வகங்கள், மாணவ, மாணவிகளுக்கான கழிவறைகள் கட்டப்பட்டது. புதிய வகுப்பறை கட்டடங்களை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார். இதனையொட்டி பள்ளியில் நடந்த விழாவில், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி எல்லப்பன், தலைமை ஆசிரியை அன்னபூரணி, பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் இளமதி, ஆசிரியர் பயிற்றுனர் செழியன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை