மேலும் செய்திகள்
நகராட்சி அலுவலகம் முன் பொதுமக்கள் தர்ணா
09-Nov-2024
கடலுார்,: கடலுார் அருகே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வலியுறுத்தி, ஊராட்சி துணைத் தலைவர் கையில் மாவுக்கட்டு போட்டு நுாதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கடலுார் அடுத்த அரிசிபெரியாங்குப்பம் ஊராட்சியில், குமாரப்பேட்டை துணை கிராமமாக உள்ளது. குமாரப்பேட்டையில் இருந்து திருவந்திபுரம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதை சீரமைக்க கோரி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதைக்கண்டித்து நேற்று காலை 10:15மணிக்கு, ஊராட்சி துணைத் தலைவர் சுபஸ்ரீ தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் குமாரப்பேட்டை திருவந்திபுரம் சாலையில் கையில் மாவுக்கட்டு போட்டு சாலையின் நடுவில் நின்று நுாதன போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
09-Nov-2024