புதிய ரேஷன் கடை: எம்.எல்.ஏ., திறப்பு
பண்ருட்டி; பண்ருட்டி அடுத்த அழகப்பசமுத்திரம் ஊராட்சியில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.12.50 லட்சம் ரூபாய் புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது. சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., ரேஷன் கடையை திறந்து, விற்பனையை துவக்கி வைத்தார். துணை பி.டி.ஓ., பூங்குழலி, இன்ஜினியர் சங்கர், ஊராட்சி செயலாளர் ஜோஸ்மின், வட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார், மாவட்ட பிரதிநிதி ஆடலரசன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப துணை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், கிளை செயலாளர் செல்வராஜ், இளைஞர் அணி துணை அமைப்பாளர் பைரவன், கிளை நிர்வாகிகள், ஏசு ஜெபஸ்டின், சுந்தரம், சின்னப்பன் பங்கேற்றனர்.