உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புதிய சார் பதிவாளர் அலுவலகம் நெல்லிக்குப்பத்தில் திறப்பு

புதிய சார் பதிவாளர் அலுவலகம் நெல்லிக்குப்பத்தில் திறப்பு

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் மிகவும் பழமையான கட்டடத்தில் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வந்தது. இடியும் தருவாயில் இருந்த அந்த கட்டடத்துக்கு பதிலாக ரூ. 1.10 கோடியில் புதிய கட்டடம் கட்டப்பட்டது. இதை நேற்று சென்னையில் இருந்து காணொளி மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். நெல்லிக்குப்பம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், நகராட்சி சேர்மன் ஜெயந்தி குத்து விளக்கேற்றினார். துணைத் தலைவர் கிரிஜா, மாவட்ட சார் பதிவாளர் தனலட்சுமி, நகர பதிவாளர் பிரகாஷ், தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், நகர செயலாளர் மணி வண்ணன், துணை செயலாளர் பார்த்தசாரதி, இளைஞரணி அமைப்பாளர் சாமிநாதன், துணை அமைப்பாளர் ராஜா, வி.சி., கட்சி நகர செயலாளர் திருமாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !