உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...

அரசு பள்ளியில் கருத்தரங்கு

நடுவீரப்பட்டு அடுத்த புதுப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சிறப்பு மருத்துவ விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு)வெற்றிவேல் தலைமை தாங்கினார். காடாம்புலியூர் அரசு ஆரம்ப சுகாதாரநிலைய டாக்டர் அரவிந்த் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் 150 மாணவ,மாணவிகளுக்கு ரத்த பரிசோதனை,உடல் பரிசோதனை செய்யப்பட்டது.

சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

காலிப்பணியிடங்களை ரூ.3 ஆயிரம் தொகுப்பு ஊதியத்தில் நிரப்ப வலியுறுத்தி கடலுார் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் சுமதி தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் அருணாச்சலம், விஜயா, பாலசுந்தரி, ஜீவா, கீதா, ருக்குமணி முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் சித்ரா வரவேற்றார். மாவட்ட செயலாளர் ரங்கசாமி துவக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் அறிவழகன் கோரிக்கை விளக்க உரையாற்றினார். மாநில துணைத்தலைவர் குணா, கண்டன உரையாற்றினார். மாநில பொருளாளர் பாலசுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்று பேசினர். மாவட்ட பொருளாளர் இந்திரா நன்றி கூறினார்.

தொழிற்பயிற்சி நிலையம் துவக்கம்

வேப்பூர் கூட்டு ரோட்டில் தற்காலிக இடத்தில் புதிய தொழிற்பயிற்சி நிலையம் துவக்க நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகர் தலைமை தாங்கினார். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மண்டல பயிற்சி இயக்குனர் பரமேஸ்வரி, விருத்தாசலம் சப் கலெக்டர் சையத் முகம்மது, வேப்பூர் தாசில்தார் மணிகண்டன் முன்னிலை வகித்தனர். வேப்பூர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் அழகன் வரவேற்றார்.விருத்தாசலம் எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன் தொழிற்பயிற்சி நிலையத்தை துவக்கி வைத்தார். அதில், நல்லூர் ஒன்றிய சேர்மன் செல்வி, தி.மு.க., ஒன்றிய செயலர் பாவாடை கோவிந்தசாமி, வி.சி., நிர்வாகி திராவிடமணி, தி.மு.க., நிர்வாகிகள் பாபு, குணா, மாரிமுத்து, ரகுநாதன், ஊராட்சி தலைவர் மகேஸ்வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

சிறப்பு மருத்துவ முகாம்

பெண்ணாடம் அடுத்த சவுந்திரசோழபுரம் ஊராட்சியில், 'பெஞ்சல்' புயல் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடந்த முகாமிற்கு, ஊராட்சி தலைவர் நடேசன் தலைமை தாங்கினார். வி.ஏ.ஓ., வினோத் முன்னிலை வகித்தார். நல்லூர் வட்டார நடமாடும் மருத்துவ சேவைகள் டாக்டர் விமலா தலைமையிலான குழுவினர் பொது மக்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை செய்து, மருந்து மாத்திரைகள் வழங்கினர்.

ஓய்வூதியர் தின விழா

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஓய்வூதியர் தின விழா நடந்தது. மாவட்ட தலைவர் வீராசாமி தலைமை தாங்கினார். ஏசுஅடியான், கணேசன், அண்ணாதுரை, கருணாநிதி முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு சீனிவாசன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் விழாவை துவக்கி வைத்து பேசினார். மாவட்ட நிர்வாகிகள் கண்ணுசாமி, ராஜலிங்கம், முத்துகிருஷ்ணன், ஆதிமூலம், திருநாவுக்கரசு, கணேசன் வாழ்த்தி பேசினர். ஸ்டேட் பாங்க் கிளை மேலாளர் வைத்தீஸ்வரன், மாவட்ட கருவூல அலுவலர் நாகராஜன், உதவி அலுவலர் வைரக்கண்ணு, மாநில துணைத் தலைவர் வெங்கடாசலம் சிறப்புரையாற்றினர். மாநில செயலாளர் மனோகரன் விழாவை நிறைவு செய்து பேசினார். மாவட்ட பொருளாளர் பாண்டுரங்கன் நன்றி கூறினார்.

கடலுாரில் வி.சி., ஆர்ப்பாட்டம்

கடலுார் மஞ்சக்குப்பம் அம்பேத்கர் சிலை அருகே மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில் தலைமை தாங்கினார். துணை மேயர் தாமரைச்செல்வன், மாநில அமைப்பு செயலாளர் திருமார்பன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில், உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலகக்கோரியும் ,அமித்ஷா உருவப்படத்திற்கு தீ வைத்தனர். உடன் போலீசார் அதை கைப்பற்றினர். நகர செயலாளர் செங்கதிர், நகர அமைப்பாளர் கிட்டு உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று, கடலுார் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றம் நுழைவு வாயிலில் வழக்கறிஞர்கள் அந்தோணிசாமி, ஜோதிலிங்கம், காத்தவராயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நெல்லிக்குப்பம்

நெல்லிக்குப்பத்தில் விடுதலை சிறுத்தைகள் முன்னாள் மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன்,நகர செயலாளர்கள் திருமாறன்,புலிகொடியான் தலைமையில் ஆலைரோடு சந்திப்பில் அமித்ஷாவை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.திடீரென அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.போலீசார் அவர்களை சமாதானம் செய்ததால் கலைந்து சென்றனர்.இதனால் கடலூர் பண்ருட்டி சாலையில் காலை 10 முதல் 10.20 மணி வரை போக்குவரத்து பாதித்தது.

விருத்தாசலம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாடாளுமன்ற மாநிலங்களவையில் அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசியதாக, விருத்தாசலம் பாலக்கரையில் வி.சி., கட்சி மைய மாவட்ட தலைவர் நீதிவள்ளல் தலைமையில், அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அமித்ஷாவை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். பின்னர், திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு, அமித்ஷாவின் உருவபொம்மையை எரித்தனர். போலீசார் உருவபொம்மையில் தண்ணீர் ஊற்றி அனைத்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட 24பேரை கைது செய்தனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

ரயிலை மறிக்க முயற்சி: ௫ பேர் கைது

அம்பேத்கரை அவதுாறாக பேசியதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, பெண்ணாடம் ரயில் நிலையத்தில், சென்னை, எழும்பூரில் இருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலை மறிக்க முயன்ற, வி.சி., திட்டக்குடி தொகுதி துணை செயலாளர் வேந்தன் உட்பட 5 பேரை, பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் குணபாலன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

வி.சி., ரயில் மறியல்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாடாளுமன்ற மாநிலங்களவையில் அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசியதாக, விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷனில் நேற்று முன்தினம் மாலை 4:30 மணியளவில் வி.சி., கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த விருத்தாசலம் போலீசார் வி.சி., மைய மாவட்ட செயலர் நீதிவள்ளல் தலைமையில் ரயில் மறியலில் ஈடுபட்ட 30 வி.சி., நிர்வாகிகளை கைது செய்து ரயில் மண்டபத்தில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ