உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெய்வேலி விமான நிலையம் மேம்படுத்த... ரூ.26 கோடி: மக்கள் பயன்பாட்டிற்கு வருவது எப்பொழுது

நெய்வேலி விமான நிலையம் மேம்படுத்த... ரூ.26 கோடி: மக்கள் பயன்பாட்டிற்கு வருவது எப்பொழுது

நெய்வேலி விமான நிலையம் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனுக்கு சொந்தமானது. டவுன்ஷிப்பை ஒட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலை45 சி ல் அமைந்துள்ளது. இந்த விமான நிலையம் 220 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. வாயுதுாத் 1990 களில் இங்கிருந்து தங்கள் டோர்னியர் டோ 228-100 உடன் சென்னை விமானநிலையத்திற்கு விமானங்களை இயக்கியது. இதில் நெய்வேலி உயர் அதிகாரிகள் தான் அதிகளவில் சென்று வந்தனர். சிறிது காலத்திற்குப் பிறகு சேவைகள் திரும்பப் பெறப்பட்டன. 2018ம் ஆண்டு இறுதிக்குள் பிராந்திய இணைப்புத் திட்டத்தின் கீழ் வணிக விமானங்களைத் தொடங்குவதற்கு ஏதுவாக இந்திய விமான நிலைய ஆணையம் விமான நிலையத்தை மேம்படுத்தி வருகிறது. தற்போது மத்திய அரசு 26 கோடி ரூபாய் செலவில் ஓடுபாதை மறுசீரமைப்பு, முனையக் கட்டட கட்டுமானம் போன்ற குடிமைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இது குறித்து கடலுார் எம்.பி., விஷ்ணுபிரசாத் லோக்சபாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு, தரப்பட்ட பதில்: நாடு முழுவதும் மாநில வாரியாக குறிப்பாக தமிழ்நாட்டில் கட்டப்பட்ட அல்லது செயல் படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள விமான நிலையங்களில் நெய்வேலி விமான நிலையத்தை தரம் உயர்த்த உதான் திட்டத்தின் கீழ் செயல் படுத்த அனுமதிக்கப்பட்டது. நாட்டில் மொத்தம் 162 செயல்படும் விமான நிலையங்கள் உள்ளன. அதில் தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்துார், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, துாத்துக்குடி, ஆகிய 6 இடங்களில் உள்ள விமான நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டும் 17 விமான நிலையங்கள் உள்ளன. கிரீன் பீல்ட் விமான நினலயங்கள் அமைக்க முதற்கட்டமாக இந்திய அரசு 24 விமான நினலயங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. அவற்றில் தமிழ்நாட்டில் பரந்துார் விமான நிைலயமும் அடங்கும். அனுமதி வழங் கப்பட்ட 24 விமான நிைலயங் களில் 12 விமான நிலையங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட ஏழு விமான நிலையங்கள் உதான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் சேலம், வேலுார்,நெய்வேலி, மற்றும் தஞ்சாவூர் ஆகிய நான்கு விமான நிலையங்கள் தேர்வு செய்து பணிகள் செய்யப்பட்டுள்ளது. இதில் சேலம் விமான நிலையம் தற்போது செயல்பாட்டில் உள்ளதாகவும் நெய்வேலி விமான நிலையம் மேம்படுத்த உதான் திட்டத்தின் கீழ் ரூபாய் 26.43கோடி செலவிடப்பட்டுள்ளது. இவ்வாறு லோக்சபாவில் பதிலளிக்கப்பட்டுள்ளது. விமான நிலையம் பணிகள் முழுவதும் முடிக்கப்பட்டால் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை