உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / என்.எல்.சி., தொழிலாளி மர்ம சாவு

என்.எல்.சி., தொழிலாளி மர்ம சாவு

நெய்வேலி; என்.எல்.சி., புதிய அனல்மின் நிலையத்தில், வெளி மாநில ஒப்பந்த தொழிலாளி மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கடலுார் மாவட்டம், நெய்வேலி என்.எல்.சி.,யின் என்.என்.டி.பி.எஸ்., அனல்மின் நிலையத்தில், பஞ்சாப் மாநிலம், தரண்தாரன் மாவட்டம் நாகோகி கிராமத்தை சேர்ந்த பல்ஜிந்தர்சிங், 46; என்பவர் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.அனல் மின் நிலையம் அருகே தற்காலிக குடியிருப்பில் வசித்து வந்த அவர் நேற்று காலை அவரது வீட்டிற்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.சக தொழிலாளர்கள் அவரது உடலை மீட்டு என்.எல்சி., மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.இதுகுறித்து தெர்மல் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ