உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / என்.எல்.சி.,யின் கிராமப்புற விளையாட்டு போட்டிகள்

என்.எல்.சி.,யின் கிராமப்புற விளையாட்டு போட்டிகள்

நெய்வேலி : என்.எல்.சி.,சார்பில் கிராமப்புற இளைஞர்களுக்கான விளையாட்டுப் போட்டி நடத்தி, பரிசு வழங்கப்பட்டது.மத்திய அரசின் அறிவுறுத்தலின்பேரில் என்.எல்.சி., நிறுவனம் சார்பில் நெய்வேலியை சுற்றியுள்ள கிராமப்புற இளைஞர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் நிறைவடைந்தது. கடந்த மார்ச்., 29ம் தேதி .நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் -10ல் உள்ள பாரதி விளையாட்டு அரங்கத்தில் என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி போட்டிகளை துவக்கி வைத்தார். இந்த விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெற, நெய்வேலியை சுற்றியுள்ள 65 கிராமங்களைச் சேர்ந்த 2,100க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.65 கிரிக்கெட் அணிகள், 54 கைப்பந்து அணிகள், 37 கபடி அணிகள் மற்றும் 6 த்ரோபால் அணிகள் பங்கேற்ற மொத்தம் 158 போட்டிகள் நடத்தப்பட்டன. அனைத்து போட்டிகளும், நாக்-அவுட் சுற்றுகளில் தொடங்கி காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் வரை முறையாக நடத்தப்பட்டது. இந்த விளையாட்டு விழா, நேற்று முன்தினம் நிறைவடைந்தது.. என்.எல்.சி., சேர்மன் பிரசன்ன குமார் மோட்டுபள்ளி முதன்மை விருந்தினராக பங்கேற்று வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் விராங்கனைகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். என்.எல்.சி., சுரங்கம் மற்றும் செயலாக்கத்துறை (கூடுதல் பொறுப்பு) இயக்குநர் சுரேஷ் சந்திர சுமன், மனித வளத்துறை இயக்குனர் சமீர் ஸ்வரூப், நிதித்துறை இயக்குநர் பிரசன்ன குமார் ஆச்சார்யா மற்றும் செயல் இயக்குநர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ