உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விளையாட இடமில்லை; இளைஞர்கள் புலம்பல்

விளையாட இடமில்லை; இளைஞர்கள் புலம்பல்

பெண்ணாடம் : நல்லுார் ஒன்றியம், பெண்ணாடம் அடுத்த வெண்கரும்பூர் மற்றும் ஊராட்சிக்குட்பட்ட நந்தப்பாடியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். கிராம இளைஞர்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்கப்படுத்த அப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், விளையாட்டுத் திடல் அமைக்கப்பட்டது. ஆனால் போதிய பராமரிப்பின்றி உபகரணங்கள் பாழானது.இதனால் கிராம இளைஞர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மாலை மற்றும் விடுமுறை நாட்களில் விளையாட முடியாமல் அதே பகுதியில் உள்ள குளத்தின் நடுவே விளையாடும் அவலம் ஏற்பட்டுள்ளது. எங்கள் ஊரில் விளையாட்டுத் திடல் இருந்தால் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என இளைஞர்கள், மாணவர்கள் தெரிவித்தனர்.எனவே, வெண்கரும்பூரில் புதிதாக விளையாட்டு திடல் அமைக்க ஒன்றிய அதிகாரிகள், ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளைஞர்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை