உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெயரளவில் வாய்க்கால் துார்வாரும் பணி: நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கும் அபாயம்

பெயரளவில் வாய்க்கால் துார்வாரும் பணி: நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கும் அபாயம்

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த மழவராயநல்லுார், குமாரக்குடியில் பெயரளவில் வடிகால் வாய்க்கால் துார்வாரியதால் வயல்களில் மழைநீர் தேங்கும் பயிர்கள் சேதமடையும் அபாயம் உள்ளது. விருத்தாசலம் பொதுப்பணித்துறை, ஸ்ரீமுஷ்ணம் பாசனப்பிரிவு கட்டுப்பாட்டில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சேத்தியாத்தோப்பு அடுத்த மழவயராயநல்லுார் பெலாந்துறை வடிகால் மற்றும் பாசன வாய்க்கால் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துார்வாரப்பட்டன. இந்த வாய்க்காலை அளவீடு செய்து ஆக்கிரமிப்பை அகற்றாமல் பெயரளவில் கண்துடைப்பிற்காக துார்வாரியுள்ள னர். குறிப்பாக, மழவராயநல்லுார் வரை மட்டுமே துார்வாரும் பணியை செய்து விட்டு குமாரக்குடி பகுதியில் வெள்ளாற்றில் வடியும் முகப்பு வாய்க்கால் துார்வாராமல் விட்டுள் ளனர். இதனால் தற்போது பெய்து வரும் மழை காரணமாக சாந்திநகர், முடிகண்டநல்லுார், மழவராயநல்லுார், குமாரக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பல நுாறு ஏக்கர் இயந்திர நெல் நடவு வயல்களில் மழைநீர் தேங்கி பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, குமாரக்குடி பகுதியில் வாய்க்காலை விரைந்து துார்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள் ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி