வடகிழக்கு பருவமழை விரைவில் துவங்கும்
கடலுார்: கடலுாரில், வரும் 17,18 ஆகிய தேதிகளில் வடகிழக்கு பருவமழை துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து வானிலையாளர் பாலமுருகன் கூறுகையில், 'கர்நாடகாவில் வரும் 15,16 ஆகிய தேதிகளில் தென்மேற்கு பருவமழை வாபஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, கடலுார், புதுச்சேரியில், வரும் 17, 18 ஆகிய தேதிகளில் வடகிழக்கு பருவமழை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்தாண்டை விட இந்தாண்டு அதிகளவில் பருவமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது' என்றார்.