மேலும் செய்திகள்
பா.ம.க., கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம்
30-Aug-2025
கடலுார் : கடலுார் வடக்கு மாவட்ட பா.ம.க.,செயற்குழு கூட்டம், காடாம்புலியூரில் நடந்தது. மாவட்ட செயலாளர் ஜெகன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கதிரவன், மாநில நிர்வாகிகள் எழில்செல்வன், கலைச்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் செல்வகுமார் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் சக்திவேல் வரவேற்றார். நாளை 17ம் தேதி கொள்ளுக்காரன்குட்டை கிராமத்திற்கு, இடஒதுக்கீடு போராட்ட தியாகிகளுக்கு நினைவு அஞ்சலி செலுத்த வருகை தரும் பா.ம.க.,நிறுவனர் ராமதாசுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது. என்.எல்.சி., நிறுவனத்திற்கு வீடு, நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்களின் வாரிசுகளுக்கு சுரங்க பணியில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் வினோத் நன்றி கூறினார்.
30-Aug-2025