செயின்ட் ஜோசப் பள்ளியில் என்.எஸ்.எஸ்., துவக்க விழா
கடலுார்: கடலுார் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் நடப்பு கல்வியாண்டிற்கான நாட்டு நலப்பணித்திட்ட துவக்க விழா நடந்தது. பள்ளி முதல்வர் நசியான் கிரகோரி தலைமை தாங்கினார். மாவட்ட தொடர்பு அலுவலர் சுந்தர்ராஜன், பிரைன்ஜிம் நிறுவனர் திருமுகம் முன்னிலை வகித்தனர். திட்ட அலுவலர் சுரேஷ்ராஜன் வரவேற்றார். பி.சி.எம்.,இயக்குனர் மேஷாக் ராஜேந்திரன் கருத்துரையாற்றினார். உதவி தலைமை ஆசிரியர்கள் தனசு, அன்பரசு, ஆரோக்கியசாமி வாழ்த்திப் பேசினர். புதிய தொண்டர்களுக்கு பேட்ஜ் அணிவிக்கப்பட்டது. விழாவில் கடந்த ஆண்டு சிறப்பாக பணியாற்றிய தொண்டர்களுக்கு சான்றிதழ், மரக்கன்று வழங்கப்பட்டன. பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. விழாவில் உடற்கல்வி இயக்குனர் ஜஸ்டின் கிளமெண்ட், இணை செயல்பாட்டு ஆசிரியர்களான விமல்ராஜ், செல்வநாதன், ஆரோக்கியசாமி, செபஸ்டின் சகாயராஜா பங்கேற்றனர். உதவி திட்ட அலுவலர் ஆண்டோ தாமஸ் மோகன் நன்றி கூறினார்.