மேலும் செய்திகள்
எண்ணுார் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு
26-Nov-2024
கடலுார்: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதால், கடலுார் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.தெற்கு வங்கக்கடல் மற்றும் இந்தியப்பெருங்கடலின் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அது மேலும் நகர்ந்து தமிழ்நாடு இலங்கை கடற்கரையை நோக்கி நகரும் என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. இதையடுத்து நேற்று கடலுார் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
26-Nov-2024