உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சி.என்.பாளையத்தில் வீணாகும் நாற்றங்கால் பண்ணை

சி.என்.பாளையத்தில் வீணாகும் நாற்றங்கால் பண்ணை

நடுவீரப்பட்டு,: சி.என்.பாளையம் முருங்கை நாற்றங்கால் பண்ணை பயன்படுத்தாமல் வீணாகி வருகிறது.நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் கொஞ்சிக்குப்பத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் மதிப்பில் முருங்கை நாற்றங்கால் பண்ணை அமைக்கப்பட்டது. இந்த பண்ணையில் முருங்கை நாற்றங்கால் வளர்க்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. தற்போது சரியான பராமரிப்பு இல்லாததால் இந்த நாற்றங்கால் பண்ணை உள்ளது. இதனால் அரசின் தொலைநோக்கு சிந்தனையில் உருவாக்கப்பட்ட இந்த நாற்றங்கால் பண்ணை திட்டம் பாழாகி விட்டது. கடலுார் ஒன்றிய அதிகாரிகள் மீண்டும் இந்த பண்ணை திட்டத்தினை நடைமுறை படுத்துவார்களா என்ற ஏதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ