உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

 செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

கடலுார்: தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில், தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும்; என்பன, உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை போலீசார் கைது செய்தனர். அதைக்கண்டித்து கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசைக்கண்டித்து நேற்று இரண்டாவது நாளாக கடலுார் அரசு மருத்துவமனை முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மற்றும் செவிலியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் வெங்கடாஜலபதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், துணைத்தலைவர் கவியரசு, கவிஞர் பால்கி, அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பழனி, கூட்டமைப்பு தலைவர் புருஷோத்தமன், மாவட்ட தலைவர் மனோகரன், மாவட்ட செயலாளர் காசிநாதன், வட்ட பொருளாளர் தண்டபாணி, செவிலியர்கள் மேம்பாட்டு சங்க நிர்வாகிகள் வானதி, ராதா, மீனா உட்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி