நர்சிங் ஊழியர் மாயம்
வடலூர்: நர்சிங் ஊழியர் மாயமானது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர் வடலுார் அடுத்த தென்குத்து புதுநகர் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் மகள் சுவேதா, 23; பி.எஸ்சி., நர்சிங் முடித்த இவர், வடலுார் தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வந்தார். கடந்த இரு தினங்களுக்கு முன், வேலைக்கு சென்ற சுவேதா, இரவு வீடு திரும்பவில்லை.இதையடுத்து அவரது தாய் சுபாவதி, 43, பல இடங்களில் தேடியும் தகவல் இல்லை. மகள் மாயமானது குறித்து அவர் வடலுார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.