முன்னோர்களுக்கு தர்ப்பணம்
கடலுார்: கடலுார் பெண்ணையாறு மற்றும் சில்வர் பீச்சில் முன்னோர்களுக்கு, ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்தனர். புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி கடலுார் பெண்ணையாறு மற்றும் சில்வர் பீச்சில் நேற்று ஏராளமானோர் கூடினர். பின், புரோகிதர்கள் மந்திரங்கள் முழங்க பொதுமக்கள் தங்களின் முன்னோர்களு க்கு தர்ப்பணம் கொடுத்து புனித நீராடினர். இதேப் போன்று, வேகாக்கொல்லையில் களைப்பாறிய ஈஸ்வரன் கோவில் அருகே உள்ள குளத்தில் பக்தர்கள் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பித்ரூ கடமைகளை நிறைவேற்றினர்.