சுரங்கபாதையில் மழைநீர் தேக்கம் அகற்றுவதில் அதிகாரிகள் அலட்சியம்
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் ரயில்வே சுரங்கபாதையில் அதிகாரிகளின் ஈகோ பிரச்னையால் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றாததால் நோய் பரவும் அபாயம் உள்ளது. நெல்லிக்குப்பம் காமராஜர் நகர் அருகே ரயில்வே சுரங்கபாதை உள்ளது. காமராஜர் நகர் பகுதியில் யாராவது இறந்தால் சுடுகாட்டுக்கு இந்த வழியாகதான் செல்ல வேண்டும். இப்பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். கடந்த வாரம் பெய்த மழையால் சுரங்கபாதையின் உள்ளே மழைநீர் தேங்கி நிற்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. மழைநீரை ரயில்வே நிர்வாகம் மற்றும் நகராட்சி யார் வெளியேற்றுவது என்பதில் ஈகோ உள்ளது. மழைநீர் தேங்கி நிற்பதால், இறந்தவர்களின் உடலை நீண்ட துாரம் சுற்றி கொண்டு செல்லும் நிலை உள்ளது. விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். சுரங்க்பாதையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றாமல் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். பொதுமக்கள் நலன்கருதி சுரங்கபாதையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.