உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சாலையில் விழுந்த மரம் அகற்றாத அதிகாரிகள்

சாலையில் விழுந்த மரம் அகற்றாத அதிகாரிகள்

கடலுார்,: கடலுார் புதுப்பாளையத்தில் சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை வெகுநேரமாகியும் அதிகாரிகள் அகற்றாததால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.கடலுார் உட்பட பல்வேறு இடங்களில் புயல் காரணமாக மரங்கள் சாலையின் குறுக்கே விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடலுார் மாநகரில் பிரதான சாலையான புதுப்பாளையம் சீத்தாராம் நகர் மின்வாரிய அலுவலகம் மற்றும் லோகாம்பாள் கோவில் அருகே நேற்று காலை சாலையின் குறுக்கே விழுந்த மரங்கள் பல மணி நேரம் ஆகியும் அகற்றப்படவில்லை. இதனால், அப்பகுதியில் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.இதுகுறித்து தாலுகா அலுவலகத்தில் புகார் தெரிவித்த போது, நெடுஞ்சாலைத் துறைக்கு தகவல் தெரிவித்து விட்டாக கூறினர். ஆனாலும் மாலை வரை மரங்கள் அப்புறப்படுத்தாமல் அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை