உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அதிகாரிகள் பேச்சுவார்த்தை; மறியல் போராட்டம் வாபஸ்

அதிகாரிகள் பேச்சுவார்த்தை; மறியல் போராட்டம் வாபஸ்

ஸ்ரீமுஷ்ணம்; ஸ்ரீமுஷ்ணம் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி நடக்கவிருந்த சாலை மறியல் போராட்டம் அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் வாபஸ் பெறப்பட்டது.ஸ்ரீமுஷ்ணம் அடுத்த சாத்தாவட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள தனிநபர் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி மா.கம்யூ., சார்பில் சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக நேற்று காலை மா.கம்யூ., வட்டக்குழு வெற்றிவீரன் தலைமையில், மாவட்ட செயற்குழு பிரகாஷ், தேன்மொழி, மற்றும் கிராம பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் செய்ய சாத்தாவட்டம் பஸ் நிறுத்தத்தில் கூடினர்.தகவலறிந்த ஸ்ரீமுஷ்ணம் தாசில்தார் சேகர், சேத்தியாதோப்பு டி.எஸ்.பி., விஜிகுமார், ஸ்ரீமுஷ்ணம் இன்ஸ்பெக்டர் வீரசேகரன், சப் இன்ஸ்பெக்டர்கள் சையத் உள்ளிட்ட போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஆக்கிரமிப்பு செய்துள்ள நபருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதற்குரிய கால அவகாசம் முடிந்த பின்னர் உரிய நேரத்தில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.இதையடுத்து, சாலை மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை