உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மூதாட்டி தற்கொலை

மூதாட்டி தற்கொலை

புவனகிரி : புவனகிரி அருகே இதய நோய் பாதிப்பு காரணமாக, மூதாட்டி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.புவனகிரி அருகே அழிச்சிக்குடி நாலாம்தெத்து முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் தனலட்சுமி,70; இதய நோயால் அவதிப்பட்டு வந்தார். சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் சமீபத்தில் வீட்டிற்கு வந்தார். கடந்த 4ம் தேதி வலி அதிகமானதால் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கினார். உறவினர்கள் அவரை மீட்டு, புவனகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.இதுகுறித்து, புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ