உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குடிபோதையில் தகராறு ஒருவர் மீது வழக்கு பதிவு

குடிபோதையில் தகராறு ஒருவர் மீது வழக்கு பதிவு

ஸ்ரீமுஷ்ணம்: குடிபோதையில் படுத்து கிடந்தவரை தாக்கி தலையை சிமெண்ட் கட்டையில் இடித்து காயப்படுத்தியவரை போலீசார் தேடி வருகின்றனர். ஸ்ரீமுஷ்ணம் பழனியாண்டவர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ்,37; . திருமணம் ஆகாத இவர், கடந்த 18ம் தேதி இரவு குடிபோதையில் புதிய பஸ் ஸ்டாண்டில் படுத்திருந்தார். அப்போது, அங்கு வந்த அதேபகுதியை சேர்ந்த பழனிசாமி, குடிபோதையில் ஆனந்தராஜிடம் தகராறு செய்து தாக்கினார். மேலும் அவரை இழுத்துச் சென்று அருகில் இருந்த சிமெண்ட் கட்டையில் தலையை இடித்தார். இதில் ஆனந்தராஜ் தலையில் உள்காயம் ஏற்பட்டு மயக்கமடைந்தார். அதனையறிந்த ஆனந்தராஜ் குடும்பத்தினர் அவரை மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த ஆனந்தராஜின் சகோதரி ஜெயா, கடந்த 23ம் தேதி கொடுத்த புகாரின்பேரில் ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்கு பதிந்து பழனிசாமியை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ