உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஒரே நாடு, ஒரே தேர்தல் மா.கம்யூ., கண்டன ஆர்ப்பாட்டம்

ஒரே நாடு, ஒரே தேர்தல் மா.கம்யூ., கண்டன ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம்: ஒரே நாடு, ஒரே தேர்தல் முயற்சியை கைவிடக் கோரி, மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஒரே நாடு, ஒரே தேர்தல் முயற்சியை கைவிட வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை தடுக்க வேண்டும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த நிலையில், வரிகளை குறைத்து பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்.காய்கறிகள், மருந்து பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மா.கம்யூ., சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது.விருத்தாசலம் பாலக்கரையில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் குமரகுரு தலைமை தாங்கினார். மூத்த வழக்கறிஞர் சந்திரசேகரன், சி.ஐ.டி.யு., ஜீவானந்தம் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு கருப்பையன் கண்டன உரையாற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி