உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சரநாராயண பெருமாள் கோவிலில் 6ம் தேதி ஏகதின பிரம்மோற்சவம்

சரநாராயண பெருமாள் கோவிலில் 6ம் தேதி ஏகதின பிரம்மோற்சவம்

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் வரும் 6ம் தேதி ஏகதின பிரம்மோற்சவம் நடக்கிறது. வரும் 6ம் தேதி பவுர்ணமியையொட்டி, திருப்பதி திருமலையில் நடைபெறுவது போல் ஏகதின பிரம்மோற்சவம் நடக்கிறது. அன்று அதிகாலை 5:00 மணிக்கு சுப்ரபாதம், 6:00 மணிக்கு தோமாலை சேவை. 6:10 முதல் 7:20 மணி வரை கொடியேற்றம் நடக்கிறது. 8:00 மணிக்கு அம்சவாகனம், 9:00 மணிக்கு சிம்ம வாகனம், காலை 10:00 மணிக்கு அனுமந்த் வாகனம், 11:00 மணிக்கு சேஷவாகன சேவை நடக்கிறது. பகல் 12:00 மணிக்கு கருடவாகனம், மாலை 4:00 மணிக்கு சூர்ணோற்சவம், மாலை 5:00 மணிக்கு குதிரைவாகன சேவையும் மாலை 6:00 மணிக்கு திருத்தேர் உற்சவமும், இரவு 7:00 மணிக்கு தீர்த்தவாரி, 7:30 மணிக்கு கொடியிறக்கமும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ