உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பைக் மீது கார் மோதல் ஒருவர் பலி: 2 பேர் காயம் 

பைக் மீது கார் மோதல் ஒருவர் பலி: 2 பேர் காயம் 

பண்ருட்டி : பண்ருட்டி அருகே கார் மோதிய விபத்தில் பைக்கில் சென்றவர் இறந்தார். பண்ருட்டி அடுத்த மருங்கூர் நடுத்தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன், ராகுல் (எ) ராமரத்தினம்,24; சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்து கீழ்மாம்பட்டில் உறவினர் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிக்காக மதியம் 2:00 மணிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். பைக் பின்னால் உறவினர் தருண்,13; அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன்,24; ஆகியோர் அமர்ந்திருந்தனர். வி.கே.டி.,தேசிய நெடுஞ்சாலையில் கொள்ளுக்காரன்குட்டை அருகில் பைக் வந்த போது, எதிரில் பண்ருட்டியில் இருந்து நெய்வேலி நோக்கி வந்த பி.ஒய்.05.ஆர்.9217 பதிவெண் கொண்ட டாடா கார் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராமரத்தினம் சம்பவ இடத்திலேயே இறந்தார். தருண், மணிகண்டன் இருவரும் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மரில் சேர்க்கப்பட்டனர். புகாரின் பேரில், முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ