ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி
விருத்தாசலம், : விருத்தாசலம் அருகே ரயிலில் அடிபட்டு, ஒருவர் உயிரிழந்தார்.விருத்தாசலம் - சென்னை ரயில்வே மார்க்கத்தில், மேப்புலியூர் ரயில்வே கேட் அருகே நள்ளிரவு 1:30 மணியளவில், 45 வயது மதிக்கத்தக்க ஆண் நபரின் உடல் சிதைந்த நிலையில் கிடந்தது. விருத்தாசலம் ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.அவர், விருத்தாசலம் அடுத்த கன்னியாங்குப்பம் வடக்கு தெருவை சேர்ந்த ராஜவேல் மகன் ஜெயக்குமார், 46, என்பது தெரிந்தது. மேலும், கடந்த 10 மாதங்களுக்கு முன் மனைவி இறந்த சோகத்தில் இருந்த அவர், மது அருந்தியபடி விரக்தியில் இருந்து வந்துள்ளார்.நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை - திருச்சி மார்க்கமாக சென்ற ஒரு ரயிலில் விழுந்து இறந்திருக்கலாம் என தெரிய வந்தது. இது தொடர்பாக, விருத்தாசலம் ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.