பைக் மீது லாரி மோதி ஒருவர் பலி
உளுந்துார்பேட்டை; பைக்கில் சென்றவர் லாரி மோதி இறந்தார்.நெய்வேலியைச் சேர்ந்தவர் மணிகண்டன்,39; இவர் நேற்று அதிகாலை 2:45 மணியளவில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பு. மாம்பாக்கம் மேம்பாலத்தில் ஹோண்டா ட்ரீம் யுகா பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சேலத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற பார்சல் லாரி பைக் மீது மோதியது. இதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே இறந்தார். உளுந்துார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.