உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இணைய வழி போட்டி மாணவர்கள் தேர்வு

இணைய வழி போட்டி மாணவர்கள் தேர்வு

சிதம்பரம் : கடலுார் மாவட்ட சர்வோதய மண்டல் அமைப்பு சார்பில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் இணைய வழியில் நடத்தப்பட்டது. அதில் ஓவியப் போட்டியில் சிதம்பரம் வீனஸ் பள்ளி தீக்ஷன்யாஸ்ரீ முதலிடமும், கடலுார் தாழங்குடா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி யோகஸ்ரீ இரண்டாமிடமும், சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி கீர்த்தனா மூன்றாமிடமும் பெற்றனர். பேச்சுப் போட்டியில் வயலுார் காமராஜ் சிறப்புப் பள்ளி லயா முதலிடமும், விருத்தாச்சலம் அருகே உள்ள இருப்பு அரசு மேல்நிலைப் பள்ளி சஞ்சனா இரண்டாமிடமும், கடவாச்சேரி தி மெட்ரிக் பள்ளி யோகித வந்தனா மூன்றாமிடமும் பெற்றனர். கட்டுரைப் போட்டியில் வீனஸ் மெட்ரிக் பள்ளி மாணவிகள் தேனிசை முதலிடமும், அம்ரித்தி இரண்டாமிடமும், நிர்மலா பள்ளி பட்டொளி மூன்றாமிடமும் பெற்றனர். அதேபோல் கல்லுாரி மாணவர்களுக்கான நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் அண்ணாமலைப் பல்கலை முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவி கீர்த்தனா முதலிடமும், விழுப்புரம் அரசூர் வி. ஆர். எஸ் பொறியியல் கல்லுாரி சதீஷ்குமார் இரண்டாமிடமும் பெற்றனர். சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுப் புத்தகங்கள் வரைவில் வழங்கப்படும் என செயலாளர் முத்துக்குமரன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை