பயணியர் நிழற்குடை எம்.எல்.ஏ., திறப்பு
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த பெரியநற்குணம் பஸ் நிறுத்தத்தில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 5 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை திறப்பு விழா நடந்தது. அருண் மொழி தேவன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, பயணியர் நிழற்குடையை திறந்து வைத்தார். மேற்கு ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், கிழக்கு ஒன்றிய செயலாளர் சீனிவாசன், மாநில ஜெ., பேரவை துணை செயலாளர் அருளழகன், ஒன்றிய நிர்வாகி ஜெயசீலன், முன்னாள் சேர்மன் லட்சுமி நாராயணன், மண வாளன், கார்த்தி, ஒன்றிய அவைத்தலைவர் செல்வராசு, மோகன் உள்ளிட்ட பலர் பங் கேற்றனர்.