ஊராட்சி அலுவலகம் டி.வி.புத்துாரில் திறப்பு
விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த டி.வி.புத்துாரில் ஊராட்சி அலுவலகம் திறப்பு விழா நடந்தது.அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 28.01 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி அலுவலகம் நேற்று திறக்கப்பட்டது. ஊராட்சி தலைவர் ராஜலட்சுமி பழனிவேல் தலைமை தாங்கினார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் பிரகாஷ் வரவேற்றார்.விருத்தாசலம் ஒன்றிய சேர்மன் மலர் முருகன் புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். ஊராட்சி உறுப்பினர்கள் சுரேஷ், வில்வநாதன், பேரளையூர் ஊராட்சித் தலைவர் மீனா ராஜேந்திரன், வி.சி., நிர்வாகி பாஸ்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.