பள்ளியில் ஓவிய கண்காட்சி
பண்ருட்டி; பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ராஜா ரவிவர்மா மாணவ நுண்கலை மன்றம் சார்பில் ஒவிய திருவிழா, கண்காட்சி நடந்தது.கண்காட்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஆலமர் செல்வம் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர்கள் லட்சுமிகாந்தன், மாலதி, ேஹமலதா முன்னிலை வகித்தனர். ஒவிய ஆசிரியர் முத்துகுமரப்பன், ஆசிரியர் ரத்தனபிரகாஷ் வரவேற்றனர்.பண்ருட்டி நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் ஒவிய கண்காட்சியை துவக்கி வைத்து பேசினார். புதுச்சேரி ஒவிய சிற்பி துரை ஒவிய கலை குறித்து பேசினார். டாக்டர் கவுரிசங்கர், பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் லோகநாதன், கல்வி வளர்ச்சி குழு பழனி, மேலாண்மை குழு உறுப்பினர் சண்முகவள்ளி பங்கேற்றனர்.என்.சி.சி., அலுவலர் ராஜா நன்றி கூறினார்.