பழனிசாமிக்கு செங்கோல் மருத்துவர் அணி வழங்கல்
கடலுார்: சிதம்பரத்தில், அ.தி.மு.க,.பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு, மேற்கு மாவட்ட மருத்துவர் அணி சார்பில் செங்கோல் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி, கடந்த 16ம் தேதி சிதம்பரம், புவனகிரி ஆகிய தொகுதிகளில் 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் பிரசாரம் செய்தார். இவருக்கு கடலுார் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., தலைமையில் நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.சிதம்பரத்தில் நேற்று நடந்த மாற்றுக் கட்சியினர் அ.தி.மு.க., வில் இணையும் விழாவில் பங்கேற்ற பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு, மேற்கு மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் கொளஞ்சிநாதன், செங்கோல் நினைவுப்பரிசாக வழங்கினார்.