உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பனை விதை சேகரித்தல் ஆலோசனை கூட்டம்

பனை விதை சேகரித்தல் ஆலோசனை கூட்டம்

சிதம்பரம் : சிதம்பரம் அடுத்துள்ள குமராட்சியில், பனை விதைகள் சேகரித்தல் மற்றும் மனை மரக்கன்றுகள் நட்டு பராமரித்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.குமராட்சி திருமண மண்டத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு குமராட்சி பி.டி.ஓ., சரவணன் தலைமை தாங்கினார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துராஜா வரவேற்றார். ஒன்றிய பொறியாளர்கள் சுரேஷ், அருள்மொழிச்செல்வி முன்னிலை வகித்தனர்.குமராட்சி வேளாண் உதவிஇயக்குநர் தமிழ்வேல், பனை விதை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லதா, வனக்காவலர் ஞானசேகர் ஆகியோர், பனை விதைகள் சேகரித்தல் மற்றும் மனை மரக்கன்றுகள் நட்டு பராமரித்தல் குறித்து ஆலோசனை வழங்கினர்.நிகழ்ச்சியில், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பரமசிவம், உதயகுமார் மற்றும் ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள், பணிதள பொறுப்பாளர்கள், சுய உதவி குழு பெண்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஒன்றிய பணி மேற்பார்வையாளர் நாகராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி