மேலும் செய்திகள்
அ.தி.மு.க., திண்ணை பிரசாரம்
30-Oct-2025
பண்ருட்டி: தொரப்பாடியில் அ.தி.மு.க., ஆட்சி சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பண்ருட்டி தொகுதிக்குட்பட்ட தொரப்பாடி பேரூராட்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் கனகராஜ் தலைமை தாங்கி, கடந்த அ.தி.மு.க., ஆட்சி கால சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார். அவைத் தலைவர் சுந்தரம், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் ராமலிங்கம், தொரப்பாடி நகர செயலாளர் சுரேஷ், முன்னாள் ஊராட்சி தலைவர் முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
30-Oct-2025