உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஊராட்சி தலைவர்கள் அழுத்தம் விழி பிதுங்கும் செயலர்கள்

ஊராட்சி தலைவர்கள் அழுத்தம் விழி பிதுங்கும் செயலர்கள்

கிராமங்களின் உள்கட்டமைப்பு வசதிக்காக ஆண்டுதோறும் கோடி கணக்கில் அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. இந்நிலையில், உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிய உள்ளதால், கடந்த சில மாதங்களாக பல்வேறு பணிகள் மேற்கொள்ள லட்சக்கணக்கில் ஊராட்சி நிதி செலவு செய்யப்பட்டது.இதையறிந்த ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், ஊராட்சி செயலர்கள் மீது நடவடிக்கை எடுத்தனர். மேலும், ஊராட்சியில் ரூ. 1லட்சத்திற்கு மேல் செலவு செய்ய ஊராட்சிகள் உதவி இயக்குனரிடம் அனுமதி பெற வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திற்கு 'செக்' வைத்தது.இந்நிலையில், ஊராட்சி தலைவர்களின் பதவிக்காலம் முடிய ஒரு மாதமே உள்ளது. இதனால், மாவட்டத்தின் கடைகோடியில் உள்ள ஊராட்சி தலைவர்கள், பணி செய்ததுபோல் கணக்கு காட்டி நிதியை பெற, ஊராட்சி செயலர்களுக்கு அழுத்தம் கொடுப்பதாக கூறப்படுகிறது. இதனால், நிதி செலவு செய்வது விஷயத்தில், அதிகாரிகளின் கெடுபிடி மற்றும் ஊராட்சி தலைவர்களின் அழுத்தம் ஆகியவற்றால் ஊராட்சி செயலர்கள் செய்வதறியாமல் விழி பிதுங்கியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி