மேலும் செய்திகள்
பங்குனி உத்திர திருவிழா 5ம் தேதி கொடியேற்றம்
03-Apr-2025
கடலுார்; கடலுார், வண்டிப்பாளையம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில், பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.கடலுார் வண்டிப்பாளையம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. காலை கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு, விழா துவங்கியது. தொடர்ந்து சூரிய பிரபை வாகனத்தில் சுவாமி வீதியுலா ஏராளமான பொதுமக்கள் விழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏப்., 7ம் தேதி திருக்கல்யாணம், 10ம் தேதி தேர் திருவிழா, 11ம் தேதி பங்குனி உத்திர 108 சங்கு பூஜை அபிஷேகம் நடக்கிறது.
03-Apr-2025