மேலும் செய்திகள்
பணி நிறைவு பாராட்டு விழா
29-Mar-2025
சிதம்பரம்: சிதம்பரத்தில் தனது மகளிடம் பழகிய வாலிபரை, வெட்டிக் கொலை செய்த வழக்கில் கணவன், மனைவிக்கு சிதம்பரம் கோர்ட்டில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.கடலுார் மாவட்டம், சிதம்பரம் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் அன்பழகன், 21; இவர், சிதம்பரம் அரங்கநாதன் நகரை சேர்ந்த பாபு, 46; சத்யா, 40; தம்பதியரின் மகளை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. பாபு தம்பதியர், அன்பழகனை கண்டித்ததுடன், அன்பழகனிடம் பேசினால் உன்னை கொலை செய்து விடுவோம் என, மகளை எச்சரித்தனர்.இந்நிலையில், கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 5ல், தங்கள் வீட்டிற்கு வந்த அன்பழகனை, பாபு, சத்யா ஆகிய இருவரும் சேர்ந்து கத்தியால் வெட்டி கொலை செய்து, உடலை ஒரு அறையில் மறைத்து வைத்தனர்.மகனை காணவில்லை என அன்பழகனின் தாய் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அன்பழகன், பாபு வீட்டிற்கு சென்ற பின் மாயமானது தெரிய வந்தது. போலீசார் அங்கு சென்று விசாரித்ததில், தம்பதியர் சேர்ந்து அன்பழகனை கொன்று அறையில் மறைத்து வைத்துள்ளது தெரியவந்தது.அதையடுத்து பாபு , சத்யா ஆகிய இருவரையும் கைது செய்து சிதம்பரம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரணை செய்த நீதிபதி உத்தமராஜ் நேற்று அளித்த தீர்ப்பில், அன்பழகனை கொலை செய்த பாபு மற்றும் அவரது மனைவி சத்யா ஆகிய இருவருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா 2000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். அரசு தரப்பில் வழக்கறிஞர் மனோகரன் ஆஜரானார்.
29-Mar-2025