உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி

ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி

மந்தாரக்குப்பம்: நெய்வேலி ரயில்வே ஸ்டேஷனில் வாகன நிறுத்துமிடம் இல்லாததால் பயணிகள் அவதியடைகின்றனர். கடலுார்-திருச்சி, கடலுார்-சேலம் ரயில் மார்க்கத்தில் நெய்வேலி ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ளது. இவ்வழியாக தினசரி கடலுார்-திருச்சி, காரைக்கால்-பெங்களுரு, கடலுார்-சேலம் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இங்கு நாள்தோறும், 100க்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நெய்வேலி ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் இல்லாததால் பயணிகள் கடும் அவதியடைகின்றனர். நெய்வேலி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து பஸ் நிலையத்திற்கு செல்ல போதிய பஸ் வசதிகள் இல்லாததால் பயணிகள் அவதிக்கு ள்ளாகின்றனர்.அதனால் ரயில்வே நிர்வாகம் நெய்வேலி ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி