உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  வேர்க்கடலை விதைப்பு பணி தீவிரம்

 வேர்க்கடலை விதைப்பு பணி தீவிரம்

விருத்தாசலம்: ஆடிப்பட்ட வேர்க்கடலை விதைக்கும் பணியில் விருத்தாசலம் பகுதி விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விருத்தாசலம் அடுத்த மணலுார், மணவாளநல்லுார், எருமனுார், சின்னவடவாடி, பெரியவடவாடி, எ.வடக்குப்பம், கோ.பூவனுார், கோ.பவழங்குடி, எடைச்சித்துார், காட்டுப்பரூர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் ஆண்டுதோறும் ஆடிப்பட்டத்தில் போர்வெல், கிணறு மற்றும் மானாவாரியாக வேர்க்கடலை விதைப்பு செய்வது வழக்கம். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்தது. இந்த மழையின் ஈரப்பதத்தை பயன்படுத்தி விருத்தாசலம் பகுதி விவசாயிகள் நடப்பாண்டு வேர்க்கடலை விதைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை