மேலும் செய்திகள்
கிரானைட் கற்கள் கடத்திய லாரி பறிமுதல்
15-Oct-2025
நெய்வேலி: நெய்வேலியில் கூழாங்கற்கள் கடத்திய டாரஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர். நெய்வேலி டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் வீரமணி, சப் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் மற்றும் போலீசார் நேற்று நெய்வேலி ஆர்ச்கேட் எதிரே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக போலி ஆவணம் மூலம் டாரஸ் லாரியில் 5 யூனிட் கூழாங்கற்களை மரக்காணத்தில் இருந்த பரமகுடிக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. உடன் லாரி டிரைவரான பண்ருட்டி அடுத்த பெரியகள்ளிப்பட்டியைச் சேர்ந்த முருகன் மகன் ரவிக்குமார், 29; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர்.
15-Oct-2025